கட்சியின் முடிவில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக அடுத்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை..!!

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன என்றும் அடுத்த கட்டமாக விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை டயானா கமகே, இஷாக் ரஹுமன், எம்.ரஹீம், நசீர் அகமட், மொஹமட் ஹரிஸ், பைசல் காசிம், அரவிந்த்குமார் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

அண்மையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல, அந்த உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதால், அவர்களை அரசாங்கத்துடன் அமர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தேனவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts