இந்தியாவில் புதிதாக 48,268 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 81 இலட்சத்தை கடந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம்,  புதிதாக  48,268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,37,119 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 48,268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 551 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதனூடாக கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,641 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,32,829 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 59,454 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts