வூகான் நகருக்கு பயணிக்கிறது ஏயார் இந்தியா விமானம்..!!

கொரோனா  நோய்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட வூகான் நகருக்கு இந்தியா தனது விமான சேவையை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கவுள்ளது.

சீனாவின் உள்ள இந்திய தூதரக தகவல்படி இன்று முதல் டெல்லி- வூகான் விமான பாதையில் வந்தே மாதரம் மிஷன் (விபிஎன்) விமானம் இயக்கப்படும்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி-குவாங்சோ இடையேயான விமானப் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பினை ஏயார் இந்தியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts