வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மருத்துவ கட்டளை திருத்தம் குறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி விவாதிப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தை நடாத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts