15 நகரங்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு..!!

புதிய மலிவு வீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக கனடா முழுவதும் 15 நகரங்களுக்கு 500 மில்லியன் டொலர்களை அரசாங்கம் உடனடியாக வழங்கப்போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கனடா முழுவதும் வீடற்ற தன்மை அதிகரிப்பதை பற்றி உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

ஒட்டாவா நகரம் 31.9 மில்லியன் டொலர்களின் பங்களிப்பைப் பெற்றது. இதற்காக ஒட்டாவாவின் மேயர் ஜிம் வாட்சன், தனிப்பட்ட முறையில் பிரதமருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

கியூபெக் சிட்டி, லண்டன், ஹாமில்டன், வாட்டர்லூ, ஹாலிஃபாக்ஸ், கல்கரி, பீல், மொன்றியல், வின்னிபெக், சர்ரே, எட்மண்டன், வன்கூவர் மற்றும் ரொறன்ரோ ஆகியவை பங்களிப்புகளைப் பெற்ற பிற முக்கிய நகரங்கள் மற்றும் பகுதிகளாகும்.

Related posts