பதின்ம வயதினர் இருவர் உயிரிழப்பு..!!

கிரேக்கத்தின் ரோட்ஸ் நகரில் இடம்பெற்ற பாராசெயிலிங் (parasailing) விபத்தில், பதின்ம வயது இருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

15 மற்றும் 13 வயதுடைய இரண்டு சகோதரர்களும், அவர்களது உறவினரான 15வயது சிறுமி ஒருவரும் இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 13 வயதுடைய சிறுவனும் 15வயது சிறுமியும் உயிரிழந்ததாகவும், மூத்த சிறுவன் படுகாயங்களுடன் தீவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் பயணித்த பாராசூட் கயிறு முறிந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கிரேக்க கடலோர காவல்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை நண்பகல் விபத்து நடந்தபோது மூவரும் வேகப் படகு மூலம் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் ரோட்ஸில் லிண்டோஸ் அருகே பாறைகளில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்களின் சடலங்களை கடலோர காவல்படை உறுப்பினர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்தனர்.

வேகப் படகைக் கட்டுப்படுத்தியவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கயிறு எவ்வாறு வெட்டப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts