சீரற்ற வானிலை : தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!!

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளதுடன்,  விழுப்புரம்,  ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts