கொரோனா மரணம் குறித்து சரியான தகவல்கள் வௌியிடப்படுவதில்லையா?

சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடப்படுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இலங்கையில் உள்ள சிரேஷ்ட வைத்தியர்கள் குழுவே எம்முடன் உள்ளனர் என்றும் தனக்கு வைத்தியர்கள் கூறுவதைதான் கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைவருக்கும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களினால்தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுவதால்தான் சமூகத்தில் கொரோனா தொற்று இல்லை என கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts