கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னதாக சந்தித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் அந்த சந்திப்பு கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது, அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் 13 ஆம் திருத்தச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts