சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுணதீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் அகழ்வுகளை தடுக்கும் வகையில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று வவுணதீவு, விளாத்தீவில் உள் மும்மாரி ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்ட விரோத மண் அகழ்விற்கு பயன்படுத்தி உழவு இயந்திரத்தினையும் கைப்பற்றியதுடன் கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேநேரம் வவுணதீவு பொலிஸாரினால் காந்திநகர் என்னும் பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காந்திநகர் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து குறித்த துப்பாக்கி மீட்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts