ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நகரத்திற்குள் நுழைய தடை..!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொழில் புரிகின்ற இரண்டு மீனவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நகரத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில், கடந்த 23ஆம் திகதி 57 மீனவர்கள்  உட்பட மூவருக்கு  பி.சி.ஆர்.பரிசோதனை மேற்காள்ளப்பட்டது.

குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர்,  கடந்த 21ஆம் திகதி, பெலியகொட மீன் சந்தைக்குச் சென்றமையால் சுய கட்டுப்பாட்டில் இருந்துள்ளார். ஆனால் மற்றொருவர், பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கும் வரை சமூகத்தில் அலைந்து திரிந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நகரத்திற்குள் நுழைவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts