முழுமையான பொதுமுடக்கம் வேண்டாம்: ஹால்டன் பிராந்திய மேயர்கள் வலியுறுத்தல்..!!

ஹால்டனுக்கு முழுமையான பொதுமுடக்கம் வேண்டாம் வலிறுத்தும் கடிதமொன்றை பிராந்தியத்தின் மேயர்கள், முதல்வர் டக் ஃபோர்ட்க்கு அனுப்பியுள்ளனர்.

பர்லிங்டன், ஹால்டன் ஹில்ஸ், மில்டன் மற்றும் ஓக்வில்லே ஆகிய மேயர்கள் தங்கள் பெயர்களை ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு ஒன்றாரியோ மாகாண முதல்வருக்கு அனுப்பினர்.

முழு பிராந்தியத்திலும் மூடுவதற்குப் பதிலாக, அதிகத் தொற்று வீதங்களை அனுபவிக்கும் குறிப்பிட்ட துறைகளில் கட்டுப்பாடுகள் வைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

மேயர்கள் அனைவரும், இந்த ஒட்டுமொத்த அணுகுமுறையைச் செய்வது என்பது சிறு வணிக நிறுவனங்களுக்கு எந்த விளக்கமும் இல்லாமல் நியாயமற்ற முறையில் தண்டிக்கிறது. அது உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று கூறினர்.

ஹால்டன் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள் பொதுச் சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றி வருவதாக அந்தக் கடிதம் கூறுகிறது. முழுமையான பொதுமுடக்க உத்தரவின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்று மேயர்கள் தெரிவித்தனர்.

Related posts