நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு மௌனம் காக்கும் பசில்..!!

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு பதிலளிக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுத்துவிட்டார்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பாதையை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளது என்ற ஊகங்கள் காணப்பட்டன.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தன்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர பயன்படுத்தப்படுகிறது என கூறி 20 ஆவது திருத்தத்தின் முக்கியத்துவத்தை பறிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இரட்டை குடியுரிமையை கொண்ட பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என்றும் தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதற்காக இராஜினாமா செய்வார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தில் சேர்க்கப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்றம் நுழைய முடியும் என்ற விதி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கவே 20 ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.

அத்தோடு எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் சசீனாவின் குடிமக்கள் பலரும் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts