கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆயிரத்தை நெருங்குகிறது..!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இதனால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் எதிர்வரும் நாட்களில் பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

இதனிடையே பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆயிரத்தை அண்மிக்கின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக 44ஆயிரத்து 896பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் எட்டு இலட்சத்து 73ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 19ஆயிரத்து 790பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 151பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 743பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts