ஈராக்கில் நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட்-19 ..!!

ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் மொத்தமாக நான்கு இலட்சத்து 51ஆயிரத்து 707பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை மொத்தமாக 10ஆயிரத்து 623பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஈராக்கில் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 554பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 59ஆயிரத்து 735பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 400பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை மூன்று இலட்சத்து 81ஆயிரத்து 349பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts