பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 10 பேருக்கு கொரோனா.

பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 100 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று இரவு 16 பேரின் முடிவுகள் வௌிவந்த நிலையில் அவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related posts