பீகார் சட்டமன்ற தேர்தல் : பிரசார களத்தில் முக்கிய தலைவர்கள்!

பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று ( வெள்ளிக்கிழமை) தனது பிரசாரத்தினை ஆரம்பிக்கவுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மூன்று கூட்டங்களில் அவர் உரையாற்றவுள்ளார். இதில் டெஹ்ரி, பக்லாபுர் பிரச்சாரக்கூட்டங்களில் பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் பங்கேற்கிறார்.

இதற்காக காந்தி மைதானம் பொதுக்கூட்டத்தில் 15 ஆயிரம் பேர் இடைவெளி விட்டு அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்க ராகுல் காந்தி இன்று ஒரே நாளில் இரண்டு கூட்டங்களில் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Related posts