தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..!!

தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலை​வர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ நாடாளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்தகுமார் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கேட்டுக் கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

எனினும், அ.அரவிந்தகுமார் மட்டும் ஆதரவாக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts