தமிழகத்தில் 7 இலட்சம் பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 193 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது கடந்த 10 நாள்களாக நோய்த்தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 92 இலட்சத்து 75,108 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ஒரே நாளில் 81,259 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7 லட்சத்து 193 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 6 இலட்சத்து 55,170 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 4,314 போ் குணமடைந்துள்ளனா்.

சென்னையில் 803 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொடா்ந்து 4 ஆவது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் வியாழக்கிழமை ஒரே நாளில் 1,077 போ் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை சென்னையில் மொத்தம் 1 இலட்சத்து 93,299 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னையைத் தவிா்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 போ், காஞ்சிபுரத்தில் 99 போ், திருவள்ளூரில் 170 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அதிகபட்சமாக கோவையில் 285 போ், திருப்பூரில் 155 போ், சேலத்தில் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது 34,198 போ் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

45 போ் பலி: பாதிக்கப்பட்டவா்களில் வியாழக்கிழமை மேலும் 45 போ் உயிரிழந்துள்ளனா். இதில் அரசு மருத்துவமனைகளில் 25 பேரும் தனியாா் மருத்துவமனைகளில் 20 பேரும் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,825 ஆக உயா்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts