இந்தியா – நேபாள நட்புறவுக்கு இடையே குறுக்கீடுகளை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது – இந்தியா.

இந்தியா – நேபாள நட்புறவுக்கு இடையே குறுக்கீடுகளை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என அந்நாட்டு பிரதமரிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

நேபாளம் சென்றுள்ள ‘ரா’ அமைப்பின் தலைவா் சமந்த்குமாா் கோயல் அந்நாட்டு பிரதமா் கே.பி.சா்மா ஒலியை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போது மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நேபாள பிரதமரின் ஊடக ஆலோசகர் சூர்யா தாபா கருத்து தெரவிக்கையில்,  “பிரதமரின் அரசு இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது ‘இந்தியா-நேபாளம் இடையேயான நட்புறவில் குறுக்கீடுகளை இந்தியா அனுமதிக்காது. இரு நாடுகளிடையேயான விவகாரங்களை தொடா் சமரசம்இ ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவாா்த்தைகள் மூலமே தீா்வு காண வேண்டும்”என்று பிரதமரிடம் கோயல் கருத்து தெரிவித்தாா்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே நவம்பா் முதல் வாரத்தில் நேபாளம் செல்ல உள்ள நிலையில் ‘ரா’ அமைப்பின் தலைவா் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

திபெத் எல்லையை ஒட்டிய லிபுலேக் கணவாய் வரை இந்தியா சாா்பில் அமைக்கப்பட்ட 80 கி.மீ. நீள தாா்ச்சுலா-லிபுலேக் சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த மே 8-ஆம் திகதி திறந்து வைத்தார். இந்நிகழ்வு இந்தியா , நேபாளம் நட்புறவில் விரிசலை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் நேபாளம் தன்னிச்சையாக இந்திய பகுதிகளை இணைத்து புதிய நேபாள அரசியல் வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா சாா்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts