வவுனியா, நெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..!!

வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கைச் சேர்ந்த குறித்த ஒப்பந்த நிறுவனம் வவுனியா வடக்கின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

அங்கு பணியாற்றும் 27 பேருக்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

குறித்த 27 பேரில் மேலும் இருவரது முடிவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்த நிலையில் இன்று வெளியான முடிவில், இரண்டு ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் 82 ஊழியர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பரிசோதனை அறிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts