ராகமை பொதுச் சந்தை பகுதியில் ஒருவர் கொலை..!!

ராகமை பொதுச் சந்தை வளாகத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில் அதில் ஒருவர் மற்றையவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

23 வயதுடைய கந்தானை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இதன்போது உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts