தண்ணீரை பகிர்ந்து குடித்த இருவருக்கு எதிராக வழக்கு..!!

கடமையிலிருந்த போது, தண்ணீர் பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாணந்​துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில் கடமையிலிருந்த இருவருக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமை குறித்த இருவருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் பாணந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் இருவரும் ஒரு போத்தல் தண்ணீரை பகிர்ந்து அருந்தியமையாலேயே இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts