கொழும்பின் பல பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு..!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் 05 பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி,புளூமென்டல் மற்றும் கிரான்பாஸ் பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன,

´சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரைமட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி,புளூமென்டல் மற்றும் கிரான்பாஸ் ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேடமாக குறித்த பிரதேசங்களில் மற்றும் பிரதேசத்தை அண்மித்துள்ள பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பொலிஸ் அதிகார பிரிவுகளில் வாழும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல் பொலிஸ் பிரிவின் ஊடாக வாகனங்களுக்கு பயணிக்க முடியும். எனினும் எவ்வித சந்தர்ப்பத்திலும் குறித்த வாகனங்களை பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான வீதிகளில் நிறுத்தவோ அல்லது பயணிகளை ஏற்றி இறக்கவோ முடியாது. அவ்வாறு மேற்கொண்டால் தனிமைப்படுத்த சட்டத்திற்கு அமைவாக குற்றம் என கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்´ என்றார்.

Related posts