ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் பலர் கைது..!!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் 76 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்திலும், கொழும்பு மாவட்டத்தின் 5 பிரதேசங்களுக்கும், குருணாகல் மாவட்டத்தில் 5 பகுதிகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts