வவுனியாவில் டிப்பர் வாகனங்கள் விபத்து: இருவர் படுகாயம்..!!

வவுனியா, ஈரப்பெரியகுளம் பிரதேசத்தில் இரு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி நடவடிக்காக மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி கல், மண் என்பவற்றை ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டது.- Advertisement –

குறித்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts