‘நன்றி, வணக்கம்’விஜய் சேதுபதியின் அதிரடி அறிவிப்பு..!!

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று 800 திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பதில் கூறியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி, திங்களன்று நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த அவர், தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி முடித்து விட்டு வெளியே வந்த அவரிடம் 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.

Related posts