இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியாது..!!

இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் இந்தியாவுடன் பதற்றம் நிலவும் நிலையில், போருக்கு தயாராகும்படி இந்திய இராணுவத்துக்கு சீன ஜனாதிபதி ஜின்பிங் அண்மையில் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையிலேயே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அமித்ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நமது நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லையை காக்கும் திறன்பாதுகாப்புப் படைகளுக்கும் நாட்டின் தலைமைக்கும் இருக்கின்றது.

மேலும், எல்லையில் எந்த வடிவில் அத்துமீறல் நடைபெற்றாலும் அதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்புப் படைகள் தயாராக உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts