20ஆவது திருத்தம் ஸ்திரமற்ற அரச பொறிமுறையை உருவாக்கும் என தேரர்கள் சிலர் கூட்டாக தெரிவிப்பு!

20ஆவது திருத்தம் ஸ்திரமற்ற அரச பொறிமுறையை உருவாக்கும் என தேரர்கள் சிலர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

தேரர்கள் சிலர் கூட்டாக இணைந்து 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பெங்கமுவே நாலக்க தேரர் மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

20 ஆவது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும் என்பதுடன், அரசியலமைப்பு பேரவை மற்றும் நீதித்துறையை அது கட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கும் எனவும் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக பலவீனமான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts