ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா- பழைய பேருந்து நிலையத்தில், ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அவுசதபிட்டிய பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா- பழைய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபரை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அவரது உடமையில் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதை அவதானித்ததுடன், குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நாளையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts