பிரித்தானியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொவிட்-19 பாதிப்பு..!!

பிரித்தானியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்றது.

இதன்படி அங்கு கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 980பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 138பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே பதிவாகி வருகின்றது. அத்துடன் இரண்டாவது தொற்றலை மிக தீவிரமாக உள்ளது.

இந்தநிலையில் புதிய கட்டுப்பாட்டு அமைப்பு மூன்று எச்சரிக்கை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நடுத்தர, உயர் மற்றும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்து 73ஆயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43ஆயிரத்து 293பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 563பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.0Shares

Related posts