பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19..!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்துள்ள நிலையில், ஒரேநாளில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 88பேர் உயிரிழந்தனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை மொத்தமாக எட்டு இலட்சத்து ஒன்பதாயிரத்து 684பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 33ஆயிரத்து 125பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை ஆறு இலட்சத்து 72ஆயிரத்து 477பேர் வைரஸ் தொற்றுக்காக அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 750பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து நான்காயிரத்து 82பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts