கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா!

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய ஒருதொகுதி பொதிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ்  (Alaina B. Teplitz) இதனைக் கையளித்துள்ளார்.

1,91000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொதிகளே இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு குறித்த பாதுகாப்பு அங்கிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் காணப்படும் என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பினை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts