பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19..!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்துள்ள நிலையில், ஒரேநாளில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 88பேர் உயிரிழந்தனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை மொத்தமாக எட்டு இலட்சத்து ஒன்பதாயிரத்து 684பேர்…

மேலும்

பிரித்தானியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொவிட்-19 பாதிப்பு..!!

பிரித்தானியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்றது. இதன்படி அங்கு கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 980பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 138பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே பதிவாகி வருகின்றது. அத்துடன் இரண்டாவது தொற்றலை மிக தீவிரமாக…

மேலும்

மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்தில் அழிவை ஏற்படுத்தும் தீ..!!

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட இயற்கை பறவைகள் சரணாலயம் உள்ள பகுதியில் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாநகர சபையின் நுழைவாயிலில் பிள்ளையாரடி-கொக்குவில் பகுதியில் உள்ள இயற்கை பறவைகள் சரணாலயம் பகுதியிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியானது நீண்ட நிலப்பரப்பினைக் கொண்டதுடன் சதுப்பு நிலங்களையும் கொண்ட பகுதியாகவும் உலகின்…

மேலும்

ரிஷாட் உடன் தொலைபேசி கலந்துரையாடல் ..!!

வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையிலேயே இதுகுறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவினர், சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும்

உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது – கெமுனு விஜேரத்ன

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “க.பொ.த. உயர்தர பரீட்சைகள் அடுத்த மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்பட மாட்டாது. பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று…

மேலும்

யாழில் கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது,…

மேலும்

கண்டியில் மின்னுயர்த்தி அறுந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!

கண்டி- லேவெல்ல பகுதியில் பு​டவைக்கடையொன்றில் தற்காலிக மின்னுயர்த்தி அறுந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கண்டி- லேவெல்ல தர்மசோக மாவத்தையில் அமைந்துள்ள பு​டவைக்கடையொன்றில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா- பழைய பேருந்து நிலையத்தில், ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் அவுசதபிட்டிய பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா- பழைய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபரை சோதனையிட்டுள்ளனர். இதன்போது…

மேலும்

பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம்: சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான சீன தூதரகம், யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சீன தூதரகம், தனது ருவிட்டர் பக்கத்தின் ஊடாக யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இவ்வாறு வாழ்த்தை தெரிவித்த சீன தூதரக அதிகாரி ஹூவெய்,  இரு தரப்பு உறவுகள்…

மேலும்