ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் 40ஆயிரத்து 782பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 72ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில், இதுவரை ஆயிரத்து 23பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு வைரஸ் தொற்றினால், 920பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், 27பேர் உயிரிழந்தனர்.

தற்போதுவரை 27ஆயிரத்து 595பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 156பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 12ஆயிரத்து 164பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts