வெலிகம ஹோட்டலுக்கு விஜயம் செய்த கொரோனா தொற்றாளர் ..!!

வெலிகமயில் உள்ள ஹோட்டலொன்றின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெலிகம நகர சபையின் தலைவர் ரெஹான் ஜெயவிக்ரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகியுள்ள மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளர்  குறித்த ஹோட்டலுக்கு (Marriott Hotel)  அண்மையில் விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஒக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் குறித்த ஹோட்டலுக்கு வருகை தந்ததாக வெலிகம நகர சபையின் தலைவர் ரெஹான் ஜெயவிக்ரம் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதன் விளைவாக, குறித்த ஹோட்டலின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ஹோட்டலுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்கு கடமை புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அங்கு வந்தவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts