விலைகளை குறைப்பதற்கான வர்த்தமானி விரைவில்..!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைக்க பெற்றுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற்கொண்டு பருப்பு, ரின் மீன், பெரிய வெங்காயம், சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அரசாங்கம் நீக்கியது.

இதற்கமைய நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரின்மீன் (பெரியது) ஒன்று 200 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும் சீனி ஒரு கிலோகிராம் 85 ரூபாய்கும் பருப்பு ஒரு கிலோகிராம் 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன், சதொச விற்பனை நிலையங்களில் தேங்காயை சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts