மும்பை, மகாராஷ்டிராவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் அமுலுக்கு வந்தன..!

மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்ராவின் முக்கிய நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன.

இதன்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது. மெட்ரோ ரயில்கள் 19ம் திகதி முதல் இயக்கப்படுகின்றன.

இருப்பினும் பாடசாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை நீடிக்கும் என்றும் சிவசேனா கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே மோதல் வலுத்த நிலையில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts