காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை..!!

காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக சாலையோரத்தில் குப்பை,  மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என  டெல்லி அரசு அறிவித்துள்ளது.

குளிர்காலத்தை கருத்தில் கொண்டு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) முதல் அவசர தேவைகளை தவிர பிற பயன்பாட்டுக்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பெரிய கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லியை வசிப்பிடமாக கொண்ட ஒருவர்,“ தலைநகரில் காற்று மாசுபாடு குறைந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதற்கு அரசு தீர்வு காணவேண்டும் ” எனத் தெரிவித்துள்ளா

Related posts