அனைத்து திரையரங்கங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..!!

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து திரை அரங்கங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டோர் 31ஆம் திகதி வரை அனைத்து திரை அரங்கங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் ஜெயந்த தர்மதாச தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக சுகாதார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில்…

மேலும்

2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை – வெட்டுப் புள்ளி தயார்..!!

2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் தயாரிக்கப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அந்த ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தர…

மேலும்

ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தாய்லாந்தில் அவசரகால நிலை பிரகடனம்..!

முடியாட்சிக்கான சீர்திருத்தங்கள் மற்றும் பிரதமர் பிரயுத் சான்- ஓச்சா பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்து மூன்று மாதங்களாக நீடித்த மாணவர்கள் தலைமையிலான வீதி ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில், தாய்லாந்து அரசாங்கம் அவசரகால நிலையை விதித்துள்ளது. இதன்போது குறைந்தது 20 ஆர்வலர்களையும் இயக்கத்தின் இரண்டு தலைவர்களையும் ஆரம்பத்தில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மேலும்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை..!!

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை அரசாங்கத்தின் பிரதான கடமையாக கருதுகின்றோம் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சுற்றாடல் அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த வாரம் முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்…

மேலும்

வெலிகம ஹோட்டலுக்கு விஜயம் செய்த கொரோனா தொற்றாளர் ..!!

வெலிகமயில் உள்ள ஹோட்டலொன்றின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெலிகம நகர சபையின் தலைவர் ரெஹான் ஜெயவிக்ரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகியுள்ள மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் முகாமையாளர்  குறித்த ஹோட்டலுக்கு (Marriott Hotel)  அண்மையில் விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஒக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் குறித்த ஹோட்டலுக்கு…

மேலும்

20 ஆவது திருத்த வரைபில் புதிய விதிகள் எதுவும் இல்லை ..!!

20 ஆவது திருத்த வரைபில் புதிய விதிகள் எதுவும் இல்லை என்றும் அதில் 1978 அரசியலமைப்பு மற்றும் அதன் 17 மற்றும் 18 வது திருத்தங்களில் உள்ள பெரும்பாலான உட்பிரிவுகள் காணப்படுவதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நீக்கப்பட்ட உட்பிரிவுகள் மீண்டும் 20 ஆவது திருத்தத்தால்…

மேலும்

கொழும்பு மாநகரசபையின் ஊழியருக்கு கொரோனா..!

கொழும்பு மாநகரசபையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடுவெலயினைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருடன் பழகியவர்களை தனிமைப்பத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும்

விலைகளை குறைப்பதற்கான வர்த்தமானி விரைவில்..!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைக்க பெற்றுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற்கொண்டு பருப்பு, ரின் மீன், பெரிய வெங்காயம், சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அரசாங்கம் நீக்கியது.…

மேலும்

முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் குழந்தை பலி..!!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய – பேரகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் மூவர் பலத்த காயமடைந்து ஹல்தும்மல வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஒன்றரை வயது குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. ஏனைய அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ வைத்தியசாலைக்கு…

மேலும்

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் 40ஆயிரத்து 782பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 72ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில், இதுவரை ஆயிரத்து 23பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு வைரஸ் தொற்றினால், 920பேர் பாதிக்கப்பட்டனர். மேலும்,…

மேலும்