மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்..!!

ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஓராண்டுக்குப் பின் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்து இரத்து செய்யப்பட்டத்தை தொடர்ந்து  காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய கட்சிகளாக இருந்துவரும் தேசிய மாநாட்டு கட்சியின்தலைவரான பரூக் அப்துல்லா, மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா,  மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதலில் சிறைசாலைகளிலும் பின்னர் வீட்டுகாவலிலும் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.   கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேசிய மாநாட்டு கட்சிதலைவரான பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.

இருப்பினும் மெகபூபா முப்தியை விடுவிப்பதில் இழுப்பறி நிலை காணப்பட்டது. அத்துடன் இது குறித்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் பதியப்பட்டிருந்தது.

குறித்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம்  இன்னும் எத்தனை நாட்கள் முப்தி வீட்டுச் சிறையில் இருக்க வேண்டும் என்பது குறித்து  2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த கெடு முடிவடைய உள்ள நிலையில் மெகபூபா முப்தி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares

Related posts