மீண்டும் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்றாா் டிரம்ப்..!!

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மீண்டும் பங்கேற்றாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டிரம்ப்புக்கும் அவரின் மனைவி மெலானியாவுக்கும் கொரோனா நோய்த்தொற்று இருப்பது கடந்த 2 ஆம் திகதி உறுதியானது. அதனைத் தொடா்ந்து இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், 4 நாள் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளை மாளிகை திரும்பினாா்.

இந்த நிலையில், ஃபுளோரிடா மாகாணம், சான்ஃபோா்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டாா். இதற்கிடையே, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு அந்த நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts