இந்நாட்டு முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பதவியுயர்வு..!!

இந்நாட்டு முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபரான பிம்ஷானி ஜாசிங்க ஆராச்சி பொலிஸ் நலன்புரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மேலும்

பிடியாணை இல்லாமல் ரிஷாடை கைது செய்ய முடியும்..!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பிடியாணை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல த லிவேரா பொரிஸாரிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதவான்…

மேலும்

அதிவேக வீதிகளை ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவரும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி.

அதிவேக வீதிகளை ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவரும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து அதிவேக வீதிகளும் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு திறைசேரி செயலாளரினால் தனி உரிமை வழங்கும் அதிவேக வீதி முதலீட்டு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும்

நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 32 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 17 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொட கொவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த…

மேலும்

ரிஷாட்டை கைது செய்யுமாறு உத்தரவு..!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுநிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பேருந்துகளைப் பயன்படுத்தி,…

மேலும்

மக்களின் நன்மைக்காக எத்தனை பேரையும் தனிமைப்படுத்த தயார்..!!

நாட்டில் 2,000 பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையங்களைத் அமைத்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ரிவி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 360 விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இராணுவ தளபதி இந்த கருத்தினை தெரிவித்தார். அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் போதுமானதாக இல்லை எனவும், தற்போது சுமார் 10,500 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு…

மேலும்

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்..!!

மண்டபம் அருகே உள்ள முயல் தீவில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை இந்திய கடலோர பொலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பான கடத்தல்காரர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முயல் தீவில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள் கடத்த…

மேலும்

இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது..!!

மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று (12) இரவு 9 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதன் போது சந்தேக நபர்கள் இருவரும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளையும் சூட்சுமமாக மறைத்து அக்கரைப்பற்றில் இருந்து…

மேலும்

மாணவியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டவருக்கு 7 வருட கடூழிய சிறை..!!

16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பினை நேற்று (12) வழங்கியுள்ளார். இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் திருகோணமலை, மொரவெவ, குணவர்தனபுர பகுதியைச் சேர்ந்த சானக்க…

மேலும்

இன்றைய காலநிலை விபரம்..!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும்…

மேலும்