குரேஷியாவில் கொவிட்-19 ..!!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் வைரஸ் தொற்றினால், மொத்தமாக 20ஆயிரத்து 440பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 87ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில் இதுவரை மொத்தமாக 324பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 508பேர் பாதிக்கப்பட்டதோடு, 7பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்து 818பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 17ஆயிரத்து 298பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts