சிம்பு & சுசீந்திரன் கூட்டணி படத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்..!!

ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா 5-வதாக தயாரிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு உடல் இழைத்து முழுமையாக தன்னை அர்ப்பணித்து தயாராகியுள்ளார். அவருக்கு பொருந்தும் வகையில் இந்தக் கதையை செதுக்கியுள்ளார் சுசீந்திரன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டிருக்கும் படக்குழு 2021-ம் படத்தைத் திரைக்கு கொண்டுவரவும் முடிவு செய்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

Related posts