பிரித்தானியாவில் முதல் முறையாக 10,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று..!!

பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தமை காரணமாக முதல் முறையாக 10,000 க்கும் மேற்பட்ட நாளாந்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை பிரித்தானியா பதிவு செய்துள்ளது.

அந்தவகையில் புதிதாக 12,872, பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சோதனை செய்த 28 நாட்களுக்குள் மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரங்களை விட தொற்றுநோய்கள் மெதுவாக அதிகரிக்கக்கூடும் என்று இந்த வாரம் வெளியிடப்பட்ட தரவு பரிந்துரைத்தன.

குறிப்பாக நாளாந்தம் அடையாளம் காணப்படும் மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த திங்கட்கிழமை 4,044 இலிருந்து செவ்வாயன்று 7,143 ஆக உயர்ந்தது.

இருப்பினும், அடுத்த நான்கு நாட்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படுபவர்கள் மொத்த எண்ணிக்கை 6,914 முதல் 7,108 வரை என தொடர்ந்தும் அதிகரிப்பை கண்டது.

அந்தவகையில் சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்பட்டது.

இது முந்தைய நாளில் 264,979 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் விளைவாகும் என தெரிவிக்கப்பட்டாலும் 24 மணி நேர காலப்பகுதியில் நடந்த மூன்றாவது அதிகபட்ச சோதனை இது என்றும் கூறப்படுகின்றது.

அதன் பிரகாரம் சனிக்கிழமையன்று பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 480,017 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts