தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விரைவில் சந்திப்பு..!!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்து தலைவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றை மிக விரைவில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரத்தை அடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது அடுத்த கட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (புதன்கிழமை) தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடி ஆராய்ந்தன.

யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எட்டபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுக்கு அரசு பல்வேறு தடைகளை விதித்தது. இதன் காரணமாக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து அதனை எதிர்க்கத் தீர்மானித்தன.

இவ்வாறு இணைந்த கட்சிகள் ஒன்றிணைந்து அண்மையில் கதவடைப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts