தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்..!!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் எந்தவொரு நியாய விலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அளவில் குடும்ப அட்டைத்தாரர்கள் சொந்த மாநிலத்தைவிட்டு இடம்பெயரும்போது தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் உணவு தானியங்களைப் பெறத்தக்க வகையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கி வைத்தார்.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் இன்று முதல் 32 மாவட்டங்களிலும் தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் எதிர்வரும் 16ஆம் திகதியில் இருந்தும் செயற்படுத்தப்படும்.

தமிழகத்தில் இருந்து எனைய மாநிலங்களுக்குப் புலம்பெயரும் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் தகவல் உறுதிப்படுத்தல் முறையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Related posts