தபால் திணைக்களதிற்கு ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பு..!!

தபால் திணைக்களம் ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பை சந்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தபால் சேவைகள் அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் சேவைகளின் நோக்கத்தை அங்கீகரித்தால் இலங்கை தபால் திணைக்களம் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்குதாரராக இருப்பார்கள் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

பரந்த வளங்களை முறையாக நிர்வகிப்பதன் மூலம் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தபால் சேவைகள் மற்றும் ஊடகங்களின் தொழில் மேம்பாட்டு அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தபால் திணைக்களம் தொடர்பாக அவதானம் செலுத்திருந்தார்.

Related posts