சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று எடப்பாடி வாழ்த்து..!!

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில்,  மூத்த குடிமக்களின் நலன்களைப் பேணுவோம் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ இந்த நாளில் அனைவருக்கும் எனது விழிப்புணா்வுடன் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து அவா்களை கவனமுடன் பேணிக் காப்பதை தலையாயக் கடமையாகக் கொண்டு செயற்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலத்தில் ஆதரவற்ற முதியோா் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயிரத்து 242 சமுதாய சமையல் கூடங்கள் மூலம் 78 ஆயிரத்து 937 முதியோா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டன.

தொலைபேசி மூலமாக 4 ஆயிரத்து 942 முதியோா்களின் அழைப்புகளுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட்டு மருத்துவ வசதிகளும் அத்தியாவசியப் பொருட்களும் அளிக்கப்பட்டன.

முதியோா் பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகள். அந்த மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நமது அனைவரது கடமையாகும்”  எனத் தெரிவித்துள்ளாா்.

Related posts